நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில். இவர் திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில்.
இவரது இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘தேசிங்கு ராஜா’ திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம் ரூ.30 கோடியை வசூலித்தது.
இந்த நிலையில், 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குநர் எழிலே இயக்கியுள்ளார். விமல், பூஜிதா, விமல், ரவி மரியா, சிங்கம் பூலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார். வரும் 11 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக விமல் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் வெளியான ஓம்காளி ஜெய்காளி தொடரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், போகுமிடம் வெகுதூரமில்லை, சார் உள்ளிட்ட படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் எழிலுடன் “தேசிங்கு ராஜா 2” திரைப்படத்தில் இணைவது அவருக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சில ரசிகர்கள், இந்த படத்தின் 2 பாகத்தில் ணடிக்கற் சூரி இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர் விமல் இந்த படத்தில் குலசேகர பாண்டியன் என்ற பெயரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் புலி, ரவி மரியா, புகழ் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.