K U M U D A M   N E W S
Promotional Banner

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

“குட் டே” திரைப்படத்தின் ஒன்லைன் கதை இவர் வாழ்வில் நடந்ததா?

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை மையமாக கொண்டு ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ளது “குட் டே” திரைப்படம். சமீபத்தில் நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.