சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி
சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; அதனால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Chennai High Court Order To TN Govt : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, kkssr ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசும், 2 அமைச்சர்களும் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகளை தடுத்து நிலங்களை பாதுகாக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.
780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி
2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.