TVK Party Flag : தவெக கொடியில் யானைகளை அகற்ற வேண்டும்.. விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை!
Bahujan Samaj Party on Vijay's TVK Party Flag : ''சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும்'' என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.