இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற மே 24, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உருவம் பொறித்த முத்து மாலையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தோன்றிய ருச்சி குஜ்ஜர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.