K U M U D A M   N E W S

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்... தி.மலையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#BREAKING : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

One Nation One Election : ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!

One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கடற்படை அட்டூழியம் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழக மீனவர்கள் பிரச்னை... ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

சொத்து வரியை மீண்டும் உயர்த்திய திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இறுகும் அமலாக்கத் துறையின் பிடி.. அமைச்சரின் சொத்து விவரங்களை கேட்டு கடிதம்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள்கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்களை முடக்க திட்டம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு  10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

முதலமைச்சரை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!

டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ED அலுவலகம் வந்த செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் அளித்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி ஆஜரானார்.

முக்கிய பிரமுகர்களை சந்தித்த செந்தில் பாலாஜி.. கண் கலங்கிய ஜோதிமணி எம்.பி.

ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்தித்து உரையாடினர்.

#JUSTIN: Senthi Balaji : செந்தில் பாலாஜியை காண குவியும் திமுகவினர்

DMK Members Visit Senthi Balaji : ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடவுள்ள நிலையில், அவரை காண திமுகவினர் குவிந்தனர்.

#BREAKING : Heavy Rain Alert : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Heavy Rain Alert in Tamil Nadu : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

471 நாள் சிறைவாசம் நிறைவு.. உதயநிதியை சந்திக்கும் செந்தில் பாலாஜி?

Senthil Balaji Meets Udhayanidhi Stalin : ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Senthil Balaji : 471 நாள் சிறைவாசம் நிறைவு.. வெளியே வந்தார் செந்தில் பாலாஜி..

Senthil Balaji Imprisonment Days : கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, நிபந்தனை ஜாமின் மூலம் வெளியே வந்தார்.

Senthil Balaji : கையில் எலுமிச்சை பழத்தோடு செந்தில் பாலாஜி.. காரை நகரவிடாமல் சூழ்ந்த தொண்டர்கள்

Senthil Balaji Release : புழல் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.