K U M U D A M   N E W S
Promotional Banner

TVK Vijay போட்டியிட போகும் தொகுதி இதுவா? வெளியான தகவல்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?

விழுப்புரம் மக்களே.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! - முதலமைச்சர் அதிரடி முடிவு

வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் – ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை

பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான நிலைய விரிவாக்கம் – போராட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.

விமான நிலைய விரிவாக்கம்.. கையகப்படுத்தப்படும் நிலம்... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

3 நொடிக்கு 10 கோடியா? "Dhanush பன்றது கீழ்தரமான செயல்"ஆத்திரத்தில் கொதித்த Nayanthara

"Nayanthara: Beyond the Fairy Tale" ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பிய தனுஷுக்கு நடிகை நயன்தாரா கண்டனம்

நடிகர் தனுஷுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு- நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு 

உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்

சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த உடல்.. சூலூர் அருகே பரபரப்பு!

கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

கைமாறிய 50 ஸ்வீட் பாக்ஸ்கள்? ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த அதிமுக?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை - உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலன் கைது

தெலங்கானாவில் மோசடி செய்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையம்.. காவல்துறை அதிரடி

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.