K U M U D A M   N E W S
Promotional Banner

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

மாநிலங்களின் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் டெலிவரி ஊழியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம்.. ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி!

வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

500 கோடி செலவில் உயர் கல்வித்துறையில் AI திறன் மேம்பாட்டு மையம்!

நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.

Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு கடன் 5 லட்சமாக உயர்வு... பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம்!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

கிசான் கிரெடிட் கார்டுகள் கடன் நிதி.. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு, 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க வசதி.

டிஜிட்டல் வழியில் தாய்மொழிப் பாடங்கள்... மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் - மேநிலைப்பள்ளிகளுக்கு பிராண்ட்பேண்ட் இணைய வசதி உறுதி செய்யப்படும்

சம்பள வகுப்பினருக்கு இன்ப அதிர்ச்சி - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.

Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. மோடியுடன் விவாதித்ததாக டிரம்ப் தகவல்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது வென்ற தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி பிரத்தியேக பேட்டி

2012 முதல் பத்மஸ்ரீ விருதுக்கு பதிவு செய்து வருகிறேன். ஆனால், இம்முறை கிடைத்தது எனக்கும், என்னுடைய குடும்பாத்தாற்கும் எண்ணற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது வழக்கு

அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி போராட்டம் - சவுமியா அன்புமணி கைது 

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.