இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுகவில் இருந்து அதிரடியான நீக்கப்பட்ட மல்லை சத்யா | MDMK | Vaiko | Mallai Sathya | Kumudam News
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.
”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் - ஓபிஎஸ் சந்திப்பு.. ஓபிஎஸ் விளக்கம் | MK Stalin OPS Meet | Kumudam News