K U M U D A M   N E W S

முதலமைச்சரை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!

டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 27-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 27-09-2024

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்.... முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி... செந்தில் பாலாஜி!

நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.

செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு ஜாமின்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

"செந்தில் பாலாஜி ஜாமின்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" - முத்தரசன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

#breakingNews: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

தவெக மாநாடு - கடைபிடிக்க வேண்டிய 17 முக்கிய நிபந்தனைகள்

நடிகர் விஜய்யின் தவெக மாநாடு அக்டோபர் 27-ம் தேதி மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

Senthil Balaji : சிறைவாசத்தில் இருந்து விடுபடுவாரா செந்தில் பாலாஜி?.. உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!

Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்... எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

மனித உரிமைகள் ஆணையத்தில் மோகன் ஜி பரபரப்பு புகார்..

இயக்குநர் மோகன் ஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.  

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 ஊயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பகலில் பிச்சைக்காரன்.. இரவில் கொள்ளைக்காரன்.. சிக்க வைத்த CCTV

கோவை மாவட்டம் சூலூரில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil |

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி திடீரென போலீசில் புகார்.. என்ன விஷயம்?

இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பேசும்பொருளாகி, ஜெயம் ரவி விவகாரத்துக்கு கொஞ்சம் ஓய்வளித்தது.

இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு.. 'இது தவறு'.. போலீசை விளாசிய நீதிபதி!

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்தார்.

Gold Price Today : எட்டாகனி உயரத்தில் தங்கம்...என்ன விலை தெரியுமா?

Gold Price Today in Chennai : சென்னையில் இன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.