பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.