K U M U D A M   N E W S

weather

இடி மின்னலோடு கொட்டப்போகும் கனமழை.. 10 மாவட்ட மக்கள் உஷார்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு... தமிழகத்தில் எங்கெல்லாம் மழை… மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை..?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.