நவகிரஹங்கள் ஒன்பதுமே குறிப்பிட்ட கால இடைவெளியில நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதே சமயம், குரு, ராகு-கேது, சனி கிரஹங்களின் நகர்வுகள் மட்டுமே அனைவராலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வருகிற 11.5.2025 அன்றும், திருக்கணிதப்படி 14.05.2025 அன்றும் குருபெயர்ச்சி ஏற்பட உள்ளது. இதனடிப்படையில், மேஷ ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.. அதன் விவரம் பின்வருமாறு-
உங்கள் ராசிக்கு 9-ம் இடமான தனுசுவுக்கும் 12-ம் இடமான மீனத்துக்கும் உரியவரான குரு பகவான், தற்போது, உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான ரிஷபத்தில் இருந்து மூன்றாம் இடமான மிதுனத்துக்குச் செல்கிறார்ங்க. இந்த சமயத்துல அவருடைய சிறப்புப் பார்வைகள் உங்க ராசிக்கு முறையே ஏழு, ஒன்பது, பதினோராம் இடங்கள்ல பதியுதுங்க. இ ந்த இடங்கள் முறையே களத்திர ஸ்தானம், பித்ரு ஸ்தானம்,பாக்ய ஸ்தானமாக அமையுதுங்க.
திறமை மற்றவர்களால் உணரப்படும்:
திருக்கணிதத்தின்படி ஏழரை சனியின் தொடக்கத்துல இருக்கற உங்களுக்கு இந்த குருவின் பார்வை, சனியின் தாக்கத்தைக் குறைப்பதாக இருப்பது நல்ல விஷயம்க. அதேசமயம், பதினோராம் இடத்துக்கு ராகுவும், ஐந்தாம் இடத்துக்கு கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி நடக்க இருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தகைய அமைப்புகளால இது உங்க உழைப்புக்குத் தகுந்த உயர்வுகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்க. அதேசமயம் பலகாலத்து ஏக்கங்கள் தீரக்கூடியதால மனசுல மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் நிறையும்க.
பணியிடத்துல இதுவரை நிலவின பாதகங்கள் எல்லாம் நீங்கி சாதகமான சூழல் உருவாகத் தொடங்கும்க. மேலதிகாரிகள் பாராட்டும் அதன்மூலமா ஆதாயமும் கிடைக்கும்க. உங்க திறமை உரியவர்களால் உணரப்படும்க. பலகாலமாக எதிர்பார்த்த ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் கைகூடும்க. சிலருக்குப் புதிய பணி வாய்ப்பும் அதனால் பெருமையும் ஏற்படும்க.
சிலர் முதன் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டுங்க..இதுவரைக்கும் வேலை தேடுவதே வேலையாக இருந்தவங்களுக்கு கூட புதிய பணிவாய்ப்பு கிடைக்கும்க. ஏற்றம் வரும் சமயத்துல அதை தலைகனமாக ஏற்றிக்காம இருந்தா, உயர்வுகள் தொடர்கதையாக இருக்கும்க.குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. வார்த்தைகள்ல இனிமையை சேர்த்துகிட்டா, வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. அவங்க உடல்நலத்துல இருந்த பிரச்னைகள் படிப்படியா நீங்கும்க. சுபகாரியத் தடைகள் விலகும்க. பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசினா, இளம் வயதினரின் காதல் பெரியோர்களால் ஏற்கப்படும்க. மணப்பேறு,மகப்பேறுக்காக காத்திருந்தவங்களுக்கு அந்த பாக்யம் கிட்டும்க.
பெண்களுக்கு யோகமான காலக்கட்டம்:
ஆடை, ஆபரணம் சேரும்க. அசையா சொத்து வாங்கும் சமயங்கள்ல கவனம் அசையாம இருக்கறது அவசியம்க. குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருந்தவங்க மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு வரும்க. சுபகாரியங்கள்ல ஆடம்பரம் தவிருங்க. செய்யும் தொழில்ல வளர்ச்சி ஏற்படும்க. புதிய தொழில் அமைப்புக்கான முயற்சிகள் எதையும் அவசரம் அலட்சியமா செய்ய வேண்டாம்க. குருவின் பார்வை அமைப்பு சாதகமாக இருந்தாலும், சனியின் அமைப்பு உழைப்புக்கு ஏற்பவே உயர்வுகளைத் தருவதாக இருக்குங்க. அயல்நாட்டு வர்த்தகத்துல அகலக்கால் வைக்க வேண்டாம்க. எந்த சமயத்திலும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டா, சகலமும் நன்மையாகும்க.
பெண்களுக்கு யோகமான காலகட்டம்க. பூர்வீக சொத்துல இருந்த இழுபறிகள் நீங்கும்க. சிலருக்கு புதிய வீடு, வாகன அமைப்பு ஏற்படும்க. தடைபட்ட திருமணம், குழந்தைப்பேறு கைகூடி வரும்க. உணவுல அதீத காரம், புளி வேண்டாம்க. உணவை முறைப்படுத்துங்க. கர்ப்பிணிகள் கூடுதல் கவனமாக இருங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. அவங்கவாழ்க்கைல சுபகாரியங்கள் வரும்போது அதீத ஆடம்பரம் தவிருங்க. அரசு , அரசியல் சார்ந்தவங்களுக்கு திடீர் ஏற்றமும் எதிர்பாராத மாற்றமும் சந்தோஷம் தரும்க. உடனிருப்போர்
ஆதரவு நிலைக்கும்க. குருவின் அமைப்பால் நன்மைகள் வரும்.அதேசமயம் சனியின் அமைப்பால் சில சங்கடங்களும் உண்டாகலாம்க. தீயசகவாசம் தீயாகச் சுடலாம், உணர்ந்து ஒதுக்குவது உத்தமம்க.
கனவுல சட்டத்தை மீறினாலும், சட்டத்தின் பிடியில் சிக்கி சங்கடப்பட நேரிடலாம்க. யாருக்கும் வாக்குறுதியோ ஜாமீனோ தருவதைத் தவிருங்க. கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப கணிசமான வாய்ப்புகள் வரும்க. நிதானமா யோசித்து செய்தா, பாராட்டுகள் பரிசுகள், அரசுவழி கௌரவங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டுங்க. மாணவர்கள் சோம்பலை விரட்டிட்டு அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பது நல்லதுங்க.. வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு, கல்வி உதவித் தொகைகள் நேர்வழி முயற்சியால நிச்சயம் கைகூடும்க. வாகனத்துல சிறுபழுது இருந்தாலும் உடனே சரி செய்துடுங்க. வேகம் தவிருங்க. தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக ஆக்கிக்கிட்டா, உடல்நலத்துல சீரான போக்கு நிலவும்க. அதேசமயம் கழிவு உறுப்பு, ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை உபாதைகள் வரலாம்க. பெண்கள் கருப்பகாலத்துலயும், மாதாந்தர உபாதை நேரத்துலயும் கூடுதல் கவனமாக இருங்க.
இந்தக் காலக்கட்டத்துல ஒருமுறை திருவெண்காடு திருத்தலம் சென்று சுவாமி, அம்பாள், புதபகவானை வணங்கிட்டு வாங்க. எப்போதும் முருகனைக் கும்பிடுங்க. வாழ்க்கைல குதூகலம் நிறையும்.