ஆன்மிகம்

குருபகவானின் ஆதிக்கம் மிக்க வியாழக்கிழமையில் பிறந்தவரா நீங்கள்? பலன் விவரங்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

குருபகவானின் ஆதிக்கம் மிக்க வியாழக்கிழமையில் பிறந்தவரா நீங்கள்? பலன் விவரங்கள்
Power of thursday Born Individuals- astrologer shelvi prediction
ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த உலகத்துல உள்ள எல்லாருமே, இருபத்தேழு நட்சத்திரம், பன்னிரண்டு ராசி,ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு நாள்ல ஏதாவது ஒரு நாள்லதான் பிறந்திருப்பாங்க. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனின்னு சொல்லும்போதே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தோட தொடர்பு இருக்கு என்பது சொல்லாமலே புரியும்.

அந்த வகையில் வியாழக்கிழமையன்று பிறந்தவர்களாக நீங்கள் இருப்பின் உங்களுக்கான பதிவு இது. உங்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்? அதுல எந்தவகையான மாற்றங்கள் செய்துகிட்டா நன்மைகளை அதிகம் பெறலாம் என்பதை குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரங்கள் பின்வருமாறு-

வியாழக்கிழமை - குருபகவானின் ஆதிக்கம்

பார்வையாலேயே கோடி நன்மை தரக்கூடிய குருபகவானின் ஆதிக்கக் கிழமையில் பிறந்தவர் நீங்க. ஜோதிட சாஸ்திரம் குருவை, தனகாரகன், புத்திரகாரகன் ஆதிக்கம் நிறைஞ்ச நாளான வியாழக்கிழமையில நீங்க பிறந்தவர் என்பதே சிறப்பான விஷயம்தான்க.

நீங்க எந்த இடத்துல இருந்தாலும் அங்கே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுங்க. மற்றவங்க மனதை புரிஞ்சு நடந்துக்கக்கூடிய நீங்க, எந்த சமயத்துலயும் நேர்மை தவறாதவராகவும் இருப்பீங்க. நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் உங்க மனசுல ஒருதடவை சரின்னு
பதிஞ்சுட்டா அதை சுலபத்துல யாராலும் மாற்ற முடியாதுங்க. எல்லோரிடமும் சகஜமா பழகற சுபாவம் உள்ள நீங்க, யாரையாவது நட்பா ஏற்றுக்கிட்டா, அவங்க சொல்றதை கொஞ்சமும் யோசிக்காம அப்படியே ஏற்றுக்கவும் கூடியவரா இருப்பிங்க. அதுதான் நீங்க மாற்றிக்க வேண்டிய விஷயம்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை : ஆராய்ஞ்சு ஏற்றுகிட்டீங்கன்னா, எதிர்காலத்துல பிரச்னை எழாம தவிர்க்கலாம்க.

உரிய நேரத்தில் எதையும் செய்யுங்க:

ஆடை, ஆபரணம், தோற்றத்தில் கம்பீரம் இதில் எல்லாம் ஆர்வம் உள்ளவரான நீங்க, வாசனை திரவியங்கள் மாதிரியானவற்றை பயன்படுத்தும்போது கவனமா இருக்கணும்க. ஒவ்வாமை பிரச்னை உங்களை வருத்திடலாம்க. அதுக்கான முன் எச்சரிக்கைதான் இதுங்க.
சின்னச் சின்ன விஷயத்தைக்கூட சின்சியரா திட்டமிட்டு செய்வீங்க. அதேசமயம் சிந்தாம சிதறாம அறுக்கணும்கறதுக்காக 'அரிவாளை கூர் தீட்டறதுலயே நேரத்தை செலவிட்டுட்டா, அறுவடைக்கான சந்தர்ப்பம் கடந்து போயிடும் என்பதைப் புரிஞ்சுகிட்டு, எதையும் உரிய நேரத்துல செய்து முடிக்கறதும் முக்கியம்க.

யாரோ எக்கேடோ கெட்டுப் போனா எனக்கு என்னன்னு இருக்கறது உங்களால முடியவே முடியாத செயலுங்க. ஆனா, எல்லா சமயத்துலயுமே இது அவசியமா என்பதை நீங்க கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும்க.

மூன்றாம் நபர் விஷயத்துல அதீத மூக்கை நுழைக்கற குணத்தை மாத்திக்குங்க, இது உங்க மதிப்பை மேலும் உயரச் செய்யும்க. கல்வி, கலை, ஞானம் இப்படி எல்லாவற்றிலும் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும்க. அதனால எல்லாவற்றையும் கற்பதுல ஆர்வமும் இருக்கும்க. எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருக்கற நீங்க அவற்றை சரியான நேரத்துல சரியான முறையில பயன்படுத்தவும் செய்வீங்க. இதனால, உங்களோட திறமை பலவிஷயத்துலயும் பளிச்சிடும்க. அதை வளர்த்துக்க முயற்சிகளைத் தொடர்வதும் முக்கியம்க.

பளிச் ஆடையை மாதிரியே பளபள அணிகலன்கள் மேலேயும் உங்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கும்க. அதேசமயம் அதுவே உங்களுக்கு சில பிரச்னைகளை சுமந்து வர்றதை மறந்துடக் கூடாதுங்க. பாதுகாப்பில்லாத இடத்துக்குச் செல்லும் சமயத்துல உங்க நகை ஆசையை கொஞ்சம் மூட்டை கட்டி வைக்கறது நல்லதுங்க.
பூமி, வீடு, மனை, நிலம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு இளம் வயதுலயே கைக்கூடும்க. பிறருக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு புத்திசாலியான நீங்க இந்த மாதிரி சமயங்கள்ல மற்றவங்க ஆலோசனைகளையும் கேட்கறதும், எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தீர்மானிக்கறதும் நல்லதுங்க.

உணவு விஷயத்தில் கவனம்:

எல்லாவிதத்திலும் பர்ஃபெக்டான நீங்க, உணவு விஷயத்துல மட்டும் கொஞ்சம் அலட்சியமாகவே இருப்பீங்க. ஏதாவது ஒரு வேலையில ஈடுபட்டா அதை முழுமையா செய்து முடிக்கறவரைக்கும் பசி, தாகம் மறந்துட்டு சாப்பாட்டுல அக்கறை இல்லாம இருப்பீங்க. அல்லது, அவசரத்துக்கு கிடைச்சதை விழுங்குவீங்க. அதனால் : உங்க உடல்நலம் கெட்டு பிரச்னைகள் தோன்றும் சமயத்துல உணர்ந்தாலும் அது தாமதமான சிகிச்சையாகவே இருக்கும்க. அதனால, சந்திர மண்டலத்துக்கே அனுப்பினாலும் சாப்பிட காப்ஸ்யூல்ல உணவு எடுத்துகிட்டுப் போறாங்க என்பதை நினைவுல வைச்சுக்குங்க. உணவுப் பழக்கம் சீராக இருந்தா, உங்க உடல் நலனும் சீராக இருக்கும்க.

நன்மை தரும் நாள்-வயது:

வியாழக்கிழமைல பிறந்த உங்களுக்கு 3, 12, 21, 30 ஆகிய தேதிகள் அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும்க. ஒருவேளை நீங்க இந்தத் தேதிகள்ல ஏதாவது ஒன்றுல பிறந்தவராக இருந்தா, அந்த நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கக்கூடிய யோகமும் சேர்ந்து வரும்க. எந்தவிதமான புதிய முயற்சியை நீங்க தொடங்கினாலும் அதை இந்தத் தேதிகள்ல ஏதாவது ஒன்றுல தொடங்கறது நல்லதுங்க.

உங்களுடைய வாழ்நாள்ல, 12, 21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகள் உங்களுக்கு நடக்கும் காலகட்டம் எல்லாம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்க. எதிர்பாராத நன்மைகளோட ஏற்றமும் மாற்றமும் அந்த சமயங்கள்ல ஏற்படும்க.

Read more: சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்

வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிட்டு, காலை ஆறுமுதல் ஏழு மணிக்குள்ள மனதுக்குப் பிடிச்ச மகான் படத்து முன்னால நெய்தீபம் ஏற்றிவைச்சு வணங்கறது நல்லதுங்க. மாதம் ஒரு வியாழக் கிழமைல பக்கத்துல உள்ள மகான் சன்னிதானத்துக்குச் சென்று கும்பிடுங்க.உங்களால இயன்ற உதவிகளை ஏழை மாணவர்களுக்குச் செய்யுங்க திருச்செந்தூர் முருகன் துதிகளை தினமும் சொல்லுங்க.

உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தறது பொதுவாகவே உங்க உடல் நலத்தை பேணிக்காக்க அவசியம்க. அலர்ஜி, சளி, சுவாச உபாதைகள், இடதுபக்க உபாதை, கொழுப்புசத்து அதிகரிப்பு, அடிவயிறு உபாதை, ஹெர்ணியா, நரம்புத் தளர்ச்சி, விஷஜந்துகளால் கடிபடுதல் இதெல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ள உடல்நலக் குறைபாடுகள்ங்க. ஆரம்ப அறிகுறியிலயே தகுந்த சிகிச்சை எடுத்துக்குங்க.

வருஷத்துக்கு ஒரு தடவை மனதுக்குப் பிடித்த மகான் திருத்தலத்துக்கு அல்லது திருச்செந்தூருக்குச் சென்று மனப்பூர்வமா வணங்குங்க. வாழ்க்கை மணக்கும்.