ஆன்மிகம்

வார ராசிபலன்: சூதானமா இருங்க துலாம் முதல் மீனம் ராசிக்காரர்களே

weekly horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

வார ராசிபலன்: சூதானமா இருங்க துலாம் முதல் மீனம் ராசிக்காரர்களே
weekly horoscope predicted by astrologer shelvi
துலாம்

முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். இந்த சமயத்தில் சோம்பலைத் தவிர்ப்பது அவசியம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். பொறுமையும் பொறுப்பு உணர்வும் இருந்தா, ஏற்றமும் மாற்றமும் வந்து சேரும். யாரோட தவறையும் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். இல்லத்தில் நிம்மதி நிலவும். உங்க வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். செலவுகள்ல நிதானம் அவசியம். வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் வரும். வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். வாரிசுகளால் பெருமை சேரும். வர்த்தகம், வாணிபத்தில் நேரடி கவனம் அவசியம். அரசு அரசியல் துறையினர் வாக்குல நிதானமா இருக்கணும். பயணப் பாதையில கவனச்சிதறல் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மாருதியைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி மலரும்.


விருச்சிகம்

உயர்வுகள் உருவாகும்,உன்னதமான காலகட்டம். பணியிடத்தில் உங்க பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மேன்மைகளை தக்கவைச்சுக்கலாம். உயர்வுகள் வரும் சமயத்தில் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். குடும்பத்தில் விசேஷங்கள் வரத்தொடங்கும். பணவரவு சீராகும். வாக்குல நிதானம் இருந்தா இல்லத்தில் இனிமை நிறையும். தினமும் சிறிது நேரம், யோகா, தியானம் பழகுங்க. எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்க. செய்யும் தொழில்ல நிதானம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவங்க சட்டப்புறம்பை கனவிலும் அனுமதிக்க வேண்டாம். தூக்கமின்மை, அஜீரணம், கால் உபாதைகள்ல கவனமா இருங்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சரி செய்யுங்க. இஷ்ட அம்மனை தினமும் வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.

தனுசு

அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரமும், அலட்சியமும் கூடாதுங்க. பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்க நேரிடலாம் கவனமாக இருங்க. குடும்பத்தில் குதர்க்கப்பேச்சு கூடாதுங்க. பிறர் வீட்டுப் பிரச்னைக்கு பஞ்சாயத்து பேசறதும் வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்க. வயதுல முதிர்ந்தவங்க அடுக்களையில கவனமா இருங்க. செய்யும் தொழில்ல புதிய முயற்சிகளை ஒத்திவையுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையா இருங்க. அலர்ஜி, பித்த அதிகரிப்பு, ரத்த அழுத்த உபாதைகளை உடனே கவனியுங்க. பைரவரை வணங்குங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

Read more: இதை செய்தால் 6 ராசிக்கும் வெற்றி உறுதி: ஜோதிடர் ஷெல்வீயின் வார ராசிபலன்

மகரம்

தித்திக்கும்படி நன்மை கிடைக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்க திறமை உரியவர்களால் உணரப்படும். புதிய பொறுப்புகள் அதிகரிக்கலாம். அவற்றைத் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்தா தேனான எதிர்காலம் காத்திருக்குங்க. வீட்டுல வீண் வாதமும் விவாதமும் தவிர்க்கணும். வாழ்க்கைத் துணையிடம் வீண் ரோஷம் தவிருங்க. தரல் பெறலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. தினமும் சில நிமிஷமாவது குலதெய்வத்தைக் கும்பிடுங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வையுங்க. செய்யும் தொழில்ல நேர்மையும் நிதானமும் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவங்க, மேலிடத்து வார்த்தையை கனவிலும் மீறாதீங்க. அடிவயிறு, கீழ்முதுகு, அலர்ஜி உபாதைகளை உடனே கவனியுங்க. மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. மங்களங்கள் சேரும்.

கும்பம்

சுணக்கம் தவிர்த்து சுறுசுறுப்பா செயல்பட்டால், சுபிட்சம் நிலவக் கூடிய காலகட்டம். அலுவலகப் பணிகள்ல நேரடி கவனம் அவசியம். எந்த சமயத்திலும் நேரம் தவறாமை முக்கியம். இடமாற்றம் வந்தா தவிர்க்காம ஏற்றுக்குங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். இந்த சமயத்தில் குதர்க்கமும் குறை சொல்லும் வேண்டாம். விடுபட்ட முன்னோர் கடன்களை முறையாகச் செய்வது நல்லதுங்க. உணவு, தூக்கத்தை முறைப்படுத்துங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். அரசு, அரசியல் துறையினர், பொறுமையால் பெருமை பெறலாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. எலும்பு, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.

மீனம்

வீண் சலிப்பும் வெட்டிப் பேச்சும் தவிர்த்தா, வெற்றியை எட்டக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்க திறமைக்கு உரிய பெருமை கிட்டும். சிலருக்கு இடமாற்றம் எதிர்பாராம வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வரவும், உறவும் மகிழ்ச்சி தரும். பூமியால் ஆதாயம் கிட்டும். குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம். தினமும் சிறிது சிறிது நேரமாவது உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யறது நல்லதுங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனம் இருந்தா ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பாராட்டு, பெருமைகள் கிட்டும். சட்டப்புறம்பு நபர்களை உடனே விலக்குங்க. பயணத்தில் நிதானத்தைக் கடைப்பிடியுங்க. கண்கள், தோள்பட்டை, பாதம், மூட்டு உபாதைகள் வரலாம். சுதர்சனரைக் கும்பிடுங்க. சுபிட்சம் உண்டாகும்.