சினிமா

71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு.. 4 விருதுகளை வென்ற மலையாள திரையுலகம்!

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியலில், மலையாளத் திரைப்படங்கள் 4 விருதுகளை வென்ற நிலையில் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு.. 4 விருதுகளை வென்ற மலையாள திரையுலகம்!
71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு.. 4 விருதுகளை வென்ற மலையாள திரையுலகம்!
தேசிய விருதுகள் பட்டியலில் மலையாள திரையுலகத்தை சார்ந்த குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் மட்டுமே இடம்பெற்றது. ஆனால், மலையாள சினிமாவின் வெற்றி ரசிகர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக 4 விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக, நடிகர்கள் ஊர்வசி மற்றும் விஜயராகவன் ஆகியோர் சிறந்த துணை நடிகர்களுக்கான விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்தில் லீலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் மையப்புள்ளியாக அவர் இருந்தாலும், தொழில்நுட்ப ரீரீதியாகச் சிறந்ததுணை நடிகைக்கான விருதினை வென்றுள்ளார். மகன் இறந்த துக்கத்தில் வாடும் ஒரு தாயின் மனநிலையையும், மருமகளுடன் ஏற்படும் சிக்கலான உறவையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, உடல் மொழியின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய ஊர்வசியின் நடிப்புக்கு, ஆறாவது முறையாகக் கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயராகவன் ‘பூக்காலம்’ திரைப்படத்தில் கிட்டத்தட்ட 100 வயது நிரம்பிய இட்டுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பேரனின் திருமண நாளில் பழைய கடிதம் ஒன்றை கண்டுபிடித்து, குடும்பத்தில் புதைந்திருக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நீண்ட கால திரையுலக வாழ்க்கையில், சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் விஜயராகவனுக்கு இந்த விருது சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. கே.பி.ஏ.சி லீலாவுடன் இணைந்து அவர் வெளிப்படுத்திய நடிப்பு, வயதான தம்பதியரின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்ததுள்ளது.

கிறிஸ்டோ டாமி இயக்கிய ‘உள்ளொழுக்கு’ சிறந்த மலையாள திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. அதேபோல், ‘2018’ திரைப்படத்தில் கலை இயக்குனர் மோகன்தாஸ் பல்லக்கொட்டி, 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தியதற்காகச் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதை வென்றுள்ளார்.

வெற்று நிலத்தில் வெள்ளக்காட்சிகளை உருவாக்கிய அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. ‘பூக்காலம்’ திரைப்படத்தின் சிறந்த படத்தொகுப்புக்காக மிதுன் முரளி சிறந்த எடிட்டருக்கான விருதை வென்றுள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆவணப்படமான 'நெகல்-கிரானிக்கிள் ஆஃப் தி பேடி மேன்' ஆவணப்படத்திற்காக எம்.கே.ராமதாஸுக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் மலையாள திரையுலகின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ள நிலையில், கேரள மக்களின் உணர்வுகளின் ஆழத்தையும், உறவுகளின் சிக்கல்களையும் பேசும் திரைப்படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.