இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரன் மற்றும் நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 5ம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியானது.
தக் லைஃப் திரைப்படம்
படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.இதனால் முதல் நாள் வசூலாக ரூ.30க்கும் அதிகமாக வந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் கன்னட மொழி குறித்து கமலின் சர்ச்சை பேச்சால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகா வாழ் கமல் ரசிகர்கள் தமிழக எல்லையான ஓசூருக்கு படையெடுத்தனர். ஓசூரில் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் திரைப்படத்தை பார்த்தனர்.
முன்னதாக கன்னடமொழி குறித்த கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்தனர். இந்த விவகாரத்தில் கமல் கடைசி வரை மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.
சாதி பெயர் நீக்கம்
இந்த நிலையில், தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் தன்னை, ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் கமல்ஹாசன் தன் படத்தில் சாதி பெயரை குறிப்பிடலாமா என கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது. மேலும் ஒரு காட்சியில் நடிகர் சிம்புவும் அதை குறிப்பிட்டு பேசுவது போன்று இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தில் சாதிப்பெயரை நீக்கி உள்ளனர். இதனால் திரைப்படத்தில் இனி ரங்கராய சக்திவேல் என்றே வசனம் பதிவாகி உள்ளது. படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.