சினிமா

‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்.. அனிருத் கொடுத்த Hint

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

 ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்.. அனிருத் கொடுத்த Hint
கிங்டம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து இவர் நடித்த ’தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், தற்போது இவர் ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.