கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திலீப்பின் விடுதலையும் குற்றச்சாட்டுகளும்
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று முன்தினம் (டிசம்பர் 8) எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முதல் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், நடிகர் திலீப் மீது பதிவு செய்யப்பட்டிருந்த சதித்திட்டம் தொடர்பான குற்றங்களை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி அவரை விடுவித்தது. தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திலீப், இந்த வழக்கில் நான் சதித்திட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் சில போலீஸ் அதிகாரிகள் சேர்ந்துதான் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர் என்றும் கூறினார்.
சட்ட நடவடிக்கைக்கான திலீப்பின் திட்டம்
இந்நிலையில், திலீப் குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 12-ஆம் தேதி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியான பின்னர், அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தை அணுகத் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் பினராயி விஜயன் பதில்
இதுகுறித்து கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்தார். நடிகை வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்கை நடத்தினர் என்றும், தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை, அவை வந்த பின்னர் மட்டுமே எதையும் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்கு எதிராக விசாரணை அதிகாரிகள் சதி செய்ததாகத் திலீப் கூறுவது குறித்துப் பேசிய முதல்வர், அதில் எந்த உண்மையும் கிடையாது என்றும், தன்னை நியாயப்படுத்துவதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறுகிறார் என்றும் கூறினார். மேலும், அரசுத் தரப்பு சார்பில் இந்த வழக்கில் சிறப்பாக வாதிடப்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

LIVE 24 X 7