பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகளும், நடிகையுமான சுஹானா கான், அலிபாக்கில் விவசாய நிலம் வாங்கியது தொடர்பாக சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். அவர் விவசாயத்திற்காக வாங்குவதாகக் கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பண்ணை வீடு கட்டியதாக புகார்
ஆவணங்களின்படி, சுஹானா கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அலிபாக் பகுதியில் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை வாங்கியுள்ளார். இந்த நிலங்கள் Deja Vu Farm Private Limited என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனம், சுஹானாவின் தாயார் கௌரி கானின் குடும்பத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
அலிபாக்கில் உள்ள தால் என்ற கிராமத்தில், சுஹானா மூன்று சகோதரிகளிடமிருந்து ஒரு நிலத்தை ரூ.12.91 கோடிக்கு வாங்கினார். அந்த நிலத்தை முதலில் விவசாயத்திற்காக அரசாங்கத்தால் ஒதுக்கியதாகவும், ஆனால் அதனை பண்ணை வீட்டிற்காக விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆவணங்களில் விவசாயி என பதிவு
இந்த நிலத்தை வாங்கியபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில், சுஹானா தாம் ஒரு விவசாயி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிலத்தை வாங்கியபோது ரூ.77.46 லட்சம் முத்திரை வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அலிபாக் வட்டாட்சியரிடம் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என துணை ஆட்சியர் சந்தேஷ் ஷிர்கே உத்தரவிட்டுள்ளார். மேலும், நிலம் வாங்கியபோது சட்டப்படியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலிவுட் கிங் என அழைக்கப்படும் ஷாருக்கானின் மகள் மீது விவசாய நிலம் ஒப்பந்தம் தொடர்பான புகார் எழுந்துள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.