சினிமா

4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி' திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியானது. ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமாபயணத்தைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுமார் 355 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், உலகளவில் 505 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, 'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், தற்போது 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாக உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளமானது, செப்டம்பர் 11, 2025 முதல் 'கூலி' திரைப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விரைவான ஓடிடி வெளியீடு, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'கூலி' படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மேலும் 50 கோடி ரூபாய் போனஸாக வழங்கப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய பல மொழி பிரபலங்கள் இணைந்து நடித்த இந்தப் படம், ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.