சினிமா

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'.. எதில், எப்போது பார்க்கலாம்?

சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'.. எதில், எப்போது பார்க்கலாம்?
Parasakthi OTT Update
நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான 'பராசக்தி', திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த 25-வது படம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'பராசக்தி' திரைப்படம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியான இப்படம், கதையமைப்பிலும் சரி, சிவகார்த்திகேயனின் நடிப்பிலும் சரி, ஒரு மைல்கல் படமாகப் பேசப்பட்டது. இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.

திட்டமிட்டதை விட முன்கூட்டியே வருகை

வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான 28 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். ஆனால், 'பராசக்தி' படக்குழுவினர் தியேட்டர் ரன்-ஐ முன்னிட்டு 48 நாட்கள் கழித்தே டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதனால் பிப்ரவரி இறுதி வாரத்தில் தான் படம் ஓடிடிக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே பிப்ரவரி 7-ஆம் தேதியே படம் வெளியாக உள்ளது.

எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?

'பராசக்தி' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE5) கைப்பற்றியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இப்படத்தை ஜீ5 தளத்தில் கண்டுகளிக்கலாம்.