பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் நேற்று ( ஜூன் 1) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.
விக்ரம் சுகுமாரன் காலமானார்
இவர் தமிழில் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தை 2013ல் இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து சாந்தனு நடிப்பில் இராவணக்கோட்டம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து தேரும், போரும் என்ற திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு, இராவணக் கோட்டம் திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் அதிர்ச்சி
விக்ரம் சுகுமாரன் இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநாராக பணிபுரிந்தவர். இவர் 2013ம் ஆண்டு அறிமுக நாயகனாக கதிர் மற்றும் ஓவியா உள்ளிட்டோர் நடிப்பில் மதயானைக்கூட்டம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். முன்னதாக தேசிய விருதுகளை வென்ற ஆடுகளம் திரைப்படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதி இருந்தார். மேலும் விக்ரம் சுகுமாரன் பொல்லாதவன், கொடிவீரன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர் இயக்கிய ‘மதயானைக்கூட்டம்’ விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது