மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் நடிகை அபிராமி, நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மதராஸ் டாகீஸ், மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து உருவாக்கியுள்ள படமாகும். இந்த டிரெய்லர், சென்னை நகரில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது.
டிரெய்லர் தொடங்கும் போது, கமல் ஹாசனின் குரலில், "நீ என் உயிரை காப்பாத்துறவன், எமன்கிட்ட இருந்து என்ன மீட்டெடுத்தவன். உன் தலையெழுத்தையும், என் தலையெழுத்தையும் ஒன்னா மாத்தி வச்சிட்டான். இனிமே நீயூம் நானும் ஒன்னு கடைசி வரைக்கும் என்ற கமலின் வசனத்தோடு ட்ரெய்லர் தொடங்குகிறது. பின்னர், சிலம்பரசன் (STR) கதாபாத்திரம் அறிமுகத்திற்கு பிறகு, நான் தாய் 8 அடி பாஞ்சா, நீ 18 அடி என்று உயர்த்தி பேசுகிறார். சிறுவயது முதலே சிம்புவிற்கு ஆதரவளித்து வந்த கமல்ஹாசன், அவரை தனது வாரிசாக அறிவிக்கிறார். பின்னர், இருவரும் பல்வேறு தருணங்களில் ஒற்றுமையாக இருக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் உள்ள நிலையில், சிம்புவும், கமலும் எதிரிகளாக மாறுகிறுன்றனர். முழுக்க, முழுக்க பரப்பான கதைக்களத்துடன் உள்ள ட்ரெய்லரில் சிம்பு, இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என்று ஆக்ரோஷமாக சொல்கிறார். தக் லைஃப் திரைப்படம் மும்பை, காஷ்மீர் போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. முடிவில் கமலும், சிம்புவும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் பிரமிக்கவைத்துள்ளது.
ஒற்றுமையாக இருந்த இருவரும், ஏன் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கதையாக உள்ளது. அபிராமியும், சிம்புவும் வரும் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. முழுக்க திரைநட்சத்திரங்கள் நிரம்பியுள்ள இந்த திரைப்படம் அதிகாரபூர்வமாக ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை கூடுதல் சிறப்பை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு ரவி கே. சந்திரன், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீகார் பிரசாத் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.