சினிமா

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வரதட்சணைக் கொடுமை வழக்கில் சட்ட ரீதியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தன் மீது அவரது சகோதரர் மனைவி அளித்த புகாரை அடுத்துப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

சமீபத்தில், நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நன்ஹ்லானி, ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமைப் புகார் அளித்தார். இந்தப் புகாரில், திருமணத்தின்போது ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுகளும் கேட்டுத் துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். உயர் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி, நடிகை ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

முஸ்கான் நன்ஹ்லானி அளித்த புகாரில், ஹன்சிகா நேரடியாக வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, மனுவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவு, இந்த வழக்கில் ஹன்சிகாவுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.