இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும், கூலி திரைப்படம் ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ‘கைதி 2’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.
ரஜினி-கமல் கூட்டணி?
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன் திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்று அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ நடிகர்கள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தேன். குறிப்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் கொரோனாவால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன்.
பின்னர் பல்வேறு காரணங்கள் இப்போது அந்த படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பார்க்கலாம். நடந்தால் மிகப்பெரிய விஷயமாக நிச்சயம் இருக்கும்” என தெரிவித்தார்.
உண்மையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து நடித்தால், அது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய விஷயமாக தான் இருக்கும்” என தெரிவித்தார்.