ஜாக்கி சான் இந்த பெயருக்கு தனி அறிமுகம் எதுவும் தேவையில்லை. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், அங்கு ஜாக்கி சானின் குறும்புத்தனத்திற்கும், அதிரடி ஆக்ஷன் சண்டைக்கும் ரசிகர் என யாராவது ஒருவர் இருப்பார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ”கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்” கடந்த மே 30 ஆம் தேதி இந்தியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜாக்கி சான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில அதிர்ச்சித் தகவல்களை 'பீப்பிள்' (People magazine) பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஜாக்கி சானிடம், அவரது குடும்ப புகைப்படம் ஒன்றை காண்பித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதை பார்த்த ஜாக்கி சான் தனது நினைவலைகளில் மூழ்கி இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது என் வயது என்னவாக இருந்தது என்பது கூட நினைவில்லை என்றார்.
தந்தை ஒரு உளவாளி:
”ஒருநாள் தனது தந்தையுடன் காரில் பயணம் செய்தபோது சில உண்மைகளை என் தந்தை என்னிடம் கூறினார். என் தந்தை சீன குடியரசின் உளவாளி. இரண்டாம் உலகப் போர் மற்றும் சீன உள்நாட்டுப் போரின் சிக்கலான காலகட்டங்களில், என் தந்தை இந்தோ-சீனப் பகுதியில் சீன அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டுள்ளார். அந்த சமயத்தில்தான் என் தாயை அவர் சந்தித்துள்ளார். இந்த தகவல் என் குடும்பத்தில் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. என் தந்தை மிகவும் வயதான காலக்கட்டத்தில் தான், எனக்கே இந்த உண்மையினை கூறினார்."
என் இயற்பெயர் பாங்:
"இதைவிட இன்னொரு முக்கியமான விஷயத்தையும் என்னிடம் கூறினார். எனது இயற்பெயர் ஜாக்கி சான் இல்லை என்றும் பாங் ஷிலுங் (Fáng Shìlóng) என்பது தான் நீ பொறந்தபோது உனக்கு வைத்த பெயர் என என் தந்தை என்னிடத்தில் கூறியபோது நான் அதிர்ச்சியடைந்தேன். எனது பெற்றோர்கள் ஹாங்காங்கில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறிய போது, என்னுடைய குடியேற்றப் பதிவேட்டில் 'சான்' என்ற குடும்பப் பெயர் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியில் அதுவே நிலைத்து விட்டது” என நேர்காணலின் ஜாக்கி சான் பேட்டியளித்துள்ளார்.
இந்தத் தகவல்கள், ஜாக்கி சானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது திரைப்படங்களில் வெளிப்படும் சாகசங்கள் குறித்த ரசிகர்களின் பார்வையை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. திரை வாழ்க்கையில் துணிச்சலான, சாகசமான கதாபாத்திரங்களை அசால்டாக செய்துக் கொண்டிருந்த ஜாக்கிசானின் தந்தை ஒரு ரகசிய உளவாளியா? என இணையத்தில் தற்போது ஜாக்கிசானின் நேர்க்காணல் வைரலாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
                
LIVE 24 X 7