சினிமா

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!

'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!
கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!
2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நேற்று வெளியிடப்பட்ட படத்தின் அறிவிப்பு புரோமோ வீடியோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே. கணேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய கதைக் களத்தில், ஒரு குடும்பப் பிரச்சினையை நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியில் சொல்லும் வகையில் இந்தப் படம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர்.

நடிகர்கள் மற்றும் படக்குழு

முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்கின்றனர். இவர்களுடன் நடிகர் கருணாகரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் இணை தயாரிப்பாளர்களாகச் சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்ஸேனா ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. படத்தின் மற்ற தொழில்நுட்ப விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.