சினிமா

‘கிங்டம்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்..!

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘கிங்டம்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்..!
‘Kingdom’ movie release date announced
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து இவர் நடித்த ’தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், தற்போது இவர் ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவு பெற்று வெளியாக தயார் நிலையில் உள்ளது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள 'கிங்டம்' திரைப்படம், இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில், படம் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ‘கிங்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த முறையும் ரிலீஸ் தள்ளிப்போகாமல் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.