ஐதராபாத்தில் நடைபெற்று வந்த 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், கவனம் பெற்றயுள்ளது.
'ஜெயிலர் 2' படப்பிடிப்பு குறித்துப் பேசிய ரஜினி, இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ளதாகவும், படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்ற உற்சாகமான செய்தியையும் அவர் பகிர்ந்துகொண்டார். 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு, தான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை என அவர் பதிலளித்தார்.
ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை
இதனைத்தொடர்ந்து அவரிடம், நடிகர்களின் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ரசிகர்கள் விபத்தில் சிக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது அடிபட்டால் அது உங்களுக்குத்தான் பாதிப்பு. படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே முழுக் கவனமும் இருக்க வேண்டும். அந்த நேரத்தைத் தவறவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்" என அறிவுறுத்தினார்.
போதைப் பழக்கத்திற்கு எதிரான வேண்டுகோள்
முக்கியமாக, இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "தயவு செய்து குடிப்பழக்கம் மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகாதீர்கள். அப்படி அடிமையானால் உங்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல், உங்களைச் சார்ந்த தாய், தந்தை என அனைவரின் வாழ்க்கையும் நரகமாகிவிடும். அப்படிப்பட்ட பழக்கம் கொண்ட நண்பர்கள் இருந்தால் கூட அவர்களிடம் செல்லாதீர்கள், தள்ளியே இருங்கள்" என்றார்.
விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு
தவெக தலைவர் விஜய் பிரசாரப் பயணத்தின்போது, அவரைப் பின்தொடர்ந்து செல்லும் இளைஞர்கள் காயமடைவது சமீபகாலமாகச் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. இதனையே ரஜினி மறைமுகமாக குறிப்பிட்டு தாக்கி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

LIVE 24 X 7