சினிமா

தக் ஃலைப் பரிதாபங்கள்.. படக்குழுவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியான தக் ஃலைப் திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. படத்தையும், படக்குழுவினரையும் எல்லைகள் தாண்டி கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தக் ஃலைப் பரிதாபங்கள்.. படக்குழுவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
thuglife movie geting overall negative reviews
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் (கர்நாடகா தவிர்த்து) ஜூன் 5 ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்தது தான்.

படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், இன்று திரைப்படம் வெளியான திரையரங்குகளில் படத்தின் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.ஆனால், படம் ரசிகர்கள் எதிர்பார்பினை பூர்த்தி செய்ததா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். திரும்பும் பக்கம் எல்லாம் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்பில் இருந்ததால், படத்தையும்-படக்குழுவினரையும் எல்லைத் தாண்டி விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அதில் சில தொகுப்பு உங்கள் பார்வைக்காக..



மேலே உள்ள பதிவில், ஒரு பயனர் தற்போது மிகவும் மகிழ்ச்சியான நபர்கள் என்றால் துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் தான் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம், சிம்புவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர்கள் ரவியும், துல்கரும் தான். தவிர்க்க முடியாத காரணத்தினால், படத்திலிருந்து வெளியேறினர்.


படம் வெளியானது முதல், தற்போது வரை நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்படுவது படத்தின் இயக்குனர் மணிரத்னம் தான்.


பட வெளியீட்டிற்கு முன்னர் வெளியான ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தில் எந்த பாடலும் முழுமையாக இல்லை, காட்சிக்கும் இசைக்கும் கொஞ்சமும் ஒட்டவில்லை என்கிற விமர்சனங்களும் வந்துள்ளன. பின்னணி இசையிலும் பெரிய அளவில் கோட்டை விட்டுள்ளார் ரஹ்மான் என படத்தினை பார்தோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தக் ஃலைப் படத்தில் இளம்வயது கமல் தோன்றுவார். இது அப்படியே நாயகன் படத்தில் பார்த்த கமலை ஞாபகப்படுத்தியது.சிலர் டிரைலரை பார்த்துவிட்டு நாயகன் படத்தோடு தக் லைப் திரைப்படத்தினை ஒப்பிட்டு வந்தார்கள், அதை கிண்டல் செய்யும் வகையில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

ஒரு பயனர் இன்னும் ஒருபடி மேலே போய், மணிரத்னம் சிறுத்தை சிவாவாக மாறி எடுத்த திரைப்படம் போல் உள்ளது என மொத்தமாக பானையினை உடைத்துள்ளார். கர்நாடகவில் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், படம் குறைந்தப்பட்சம் முதலீட்டு பணத்தையாவது பாக்ஸ் ஆபிஸில் பெறுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.