சினிமா

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்…திரையுலகினர் இரங்கல்

இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு

 கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்…திரையுலகினர் இரங்கல்
கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது தாயார் அங்கம்மாள்
வைரமுத்து தாயார் மறைவு

தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. இவர் 5க்கும் மேற்பட்ட சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிய முதல் மரியாதை படத்தின் அனைத்து பாடல்களுக்காக வைரமுத்துவுக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
நிகழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் இதுவரை 5,800 பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்களுக்கும், கவிதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள். இவர் தேனியில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைரமுத்துவின் தாயார் இன்று(மே.10) காலமானார்.

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” என பதிவிட்டுள்ளார். அவரின் பதவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி இன்று காலமானார். இவர் முட்டாசுப்பட்டி, பரியேறும் பெருமாள், காலா, ரஜினி முருகன், ஜெய்பீம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.