ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு இயக்கும் புதிய படத்தில், நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், டாம் குரூஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்தப் படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை பகத் பாசில் தற்போது விளக்கமளித்துள்ளார்.
‘மொழி உச்சரிப்பே காரணம்’
ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பகத் பாசில், ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
"உண்மையில் சொல்வதென்றால், நான் கொடுத்த ஆடிஷனுக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குநருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதற்கு என்னுடைய ஆங்கில உச்சரிப்புதான் காரணம் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், என்னை 3 முதல் 4 மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமின்றித் தங்கிப் பயிற்சி எடுக்குமாறு சொன்னார்கள். படத்துக்கான அட்வான்ஸ் தொகை கூட கொடுக்கவில்லை. அதனால்தான் நான் அந்தப் புராஜெக்டைவிட்டு விலக முடிவு செய்தேன்.
அவர்கள் விரும்பும் உச்சரிப்பு எனக்கு வரவில்லை. இந்த உச்சரிப்புக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றியது. ஆடிஷன் இல்லையென்றால், நான் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு கூட கிடைத்திருக்காது. மேலும், அந்தப் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
படத்தின் பின்னணி
‘Amores Perros’, ‘Birdman’, ‘The Revenant’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வென்றவர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு. அவரது புதிய படத்தில் டாம் குரூஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சாண்ட்ரா ஹுல்லர், ரிஸ் அகமது, ராபர்ட் ஜான் பர்க் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
'மாரீசன்' திரைப்படம்
இதற்கிடையே, பகத் பாசில், வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாரீசன்’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படம், சுமார் 9 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.