ஐபிஎல் போட்டிகள்
கடந்த மார்ச் 22ம் தேதி முதல் 18வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டி மே25ம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஐபிஎல் நிர்வகாம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஒருவாரத்திற்கு மட்டும் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஸ்.எஸ்.தோனியின் வாசகத்தை பதிவாக வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே எக்ஸ் தளப்பக்கத்தில், நாடு தான் முதன்மையானது. மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளது. மேலும், “ஒவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு துடிப்பிலும் பெருமை. நமது ராணுவத்துக்கு சல்யூட்” என பதிவிட்டுள்ளது. முன்னதாக எம்.எஸ்.தோனி இந்த வாசகத்தை தனது குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும்போது கூறியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும். மீறி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்றும் பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.