ஐபிஎல் 2025

IPL2025: மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை.. மே-17-ல் தொடக்கம்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

IPL2025: மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை.. மே-17-ல் தொடக்கம்!
ஐபிஎல் 2025 போட்டிகள் மே-17-ல் தொடக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2 வாரங்களாக போர் பதற்றத்திற்கான சூழல் நிலவியதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, இரண்டு நாடுகளும் அமைதி உடன்படிக்கை பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை நிறுத்திவைத்துள்ளதால், கைவிடப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக கைவிடப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே17 ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில், 13 லீக் போட்டிகள், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள், மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையில், சென்னை உள்ளிட்ட சில அணிகளின் போட்டிகள் மட்டும் ஹோம் கிரவுண்டில் இல்லாமல் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஸ்டேடியங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் வண்ணம் புதிய அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை:

Image



நாட்கள் அணிகள் இடம்


மே 17 -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு
மே 18 - ராஜஸ்தான் ராயல்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் - ஜெய்ப்பூர்
மே 18 - டெல்லி கேபிடல்ஸ் Vs குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி
மே 19 -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ
மே 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி
மே 21 - மும்பை இந்தியன்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் - மும்பை
மே 22 - குஜராத் டைட்டன்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அகமதாபாத்
மே 23 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு
மே 24 - பஞ்சாப் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் - ஜெய்ப்பூர்
மே 25 - குஜராத் டைட்டன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்
மே 25 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி
மே 26 - பஞ்சாப் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் - ஜெய்ப்பூர்
மே 27 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அட்டவணை

மே 29 - தகுதிச் சுற்று ( 1 )
மே 30 - எலிமினேட்டர் சுற்று
ஜூன் 1 - தகுதிச் சுற்று ( 2 )
ஜூன் 3 - இறுதிப்போட்டி

( ப்ளே ஆஃப் போட்டிக்கான இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை )

ஐபிஎல் 2025 அட்டவணையின்படி, இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 மே 25ம் தேதியுடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி, இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.