நம் உடல் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுசேர்ப்பது, தேவையற்றக் கழிவுகளை வெளியேற்றுவது என எண்ணற்ற செயல்பாடுகளுக்கு ‘நீர்ச்சத்து’ அவசியமாகிறது.
நம் உடலில் போதிய ‘நீர்ச்சத்து' இல்லாமல் போனால், நீரிழப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக உடற்சோர்வு, தலைச்சுற்றல், உடலின் இயல்பான செயல்பாடுகள் அனைத்துமே பலவீனமடைந்துவிடும். கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க, 'நீர்ச்சத்து' நிறைந்த காய், கனிகளைச் சாப்பிடுவது அவசியம். வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபிகள் தயாரிப்பு முறை பின்வருமாறு-
1.முள்ளங்கி - கேரட் பச்சடி
தேவையானவை: முள்ளங்கி - 2, கேரட் 1, கெட்டித்தயிர்- 2 கப், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு, பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1.
செய்முறை: வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் குறிப்பிட்டுள்ள பொருள்களைத் தாளித்து, துருவிய முள்ளங்கி சேர்த்து, வதக்கவும். பின்னர், துருவிய கேரட்டைச் சேர்த்து, நன்றாக வதக்கி இறக்கி, ஆறவிடவும். அகலமான பாத்திரத்தில் தயிரைக் கொட்டி, உப்பு, வதக்கி ஆறவைத்த காய்கறிக் கலவையைச் சேர்த்து, நன்றாகக் கலந்துவிடவும்.
குறிப்பு: சப்பாத்தி / பிரியாணி / பிஸிபேளாபாத் என எதனுடன் வேண்டுமானாலும், இந்தப் பச்சடியைத் தொட்டுக்கொள்ளலாம்.
2. புடலங்காய் ரிங்க்ஸ்
தேவையானவை: விதை நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கிய புடலங்காய் -3 கப், கடலை மாவு 1/4 கப், சில்லி பவுடர் - 2 -டேபிள் ஸ்பூன், அரிசிமாவு 5 டேபிள் -ஸ்பூன், சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருள்களையும் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, நன்றாகக் கலந்துவிடவும். இதனை, காய்ந்த எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: கலவை சாதங்களுடன் பரிமாற ஏற்றது.
3.பூசணிக்காய் பாயசம்
தேவையானவை: பூசணித்துருவல் (பூசணியைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவியது) 2 கப், நெய் - 4 டேபிள் ஸ்பூன், பால் சர்க்கரை 1 1/2 கப், ஏலக்காய்த்தூள் திராட்சை - தலா 2 டேபிள் ஸ்பூன். 1 கப், 1 டீஸ்பூன், பாதாம், முந்திரி,
செய்முறை: வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, பாதாம், முந்திரி, திராட்சையை வறுத்து, தனியே வைக்கவும். அதே வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி, பூசணித்துருவல் சேர்த்து, நன்றாக வதக்கவும். அடுத்ததாக, சர்க்கரையைச் சேர்த்து, கிளறவும். கலவை ஒன்றாகச் சேர்ந்து வந்ததும், பால் ஊற்றி, ஒரு கொதி விடவும். அடுத்ததாக, ஏலக்காய்த் தூளைத் தூவி, வறுத்துவைத்துள்ள முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து, கலந்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு: இந்தப் பாயசத்தை சூடாகப் பருகலாம் / ஆறவைத்தும் பருகலாம்.
4. சுரைக்காய் அடைதோசை
தேவையானவை: சுரைக்காய்த் துருவல் 2 கப், எண்ணெய் --6 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு. ஊறவைக்க: புழுங்கல் அரிசி – 2 கப், -துவரம்பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3. தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 8 இதழ்கள்.
செய்முறை: ஊறவைப்பதற்குக் கொடுத்துள்ளவற்றை, 1 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, சுரைக்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அரைத்துவைத்துள்ள அடைமாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிடவும். இந்த மாவை, சூடான தவாவில் ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விடவும். ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு, வெந்ததும், எடுக்கவும்.
குறிப்பு: வெண்ணெய் / புடலங்காய் அவியலைத் தொட்டுக்கொள்ளலாம்.
5. தர்பூசணி ரசம்
தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணித் துண்டுகள்-1 கப், குழைய வெந்தத் துவரம்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு. கொரகொரப்பாகப் பொடிக்க: வரமிளகாய் -1, மிளகு, சீரகம், தனியா, தேங்காய்த்துருவல் தலா 1 டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு, -பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இதழ்கள். மேலே தூவ: பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் குறிப்பிட்டுள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல், கொரகொரப்பாகப் பொடித்து, ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடன், உப்பு சேர்க்கவும். பின்னர், தர்பூசணித் துண்டுகளை கட்டியில்லாமல் மிக்ஸியில் அடித்துச் சேர்த்து, அடுப்பிலேற்றி, கொதிக்கவிடவும். 2 கொதிகள் வந்ததும், வெந்தத் துவரம்பருப்புடன் 1/4 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் ரசத்தில் ஊற்றி, மேலும் ஒரு கொதி விடவும். தாளிப்புப் பொருள்களைத் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லித்தழைத் தூவி, அடுப்பிலிருந்து இறக்கவும்.