பீகார் மாநிலம் போத்கயாவில், ஊர் காவல் படை (Home Guard) தேர்வுக்கான உடல் தகுதித் தேர்வின்போது மயங்கி விழுந்த 26 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில், ஓட்டுநர் மற்றும் ஒரு டெக்னீசியன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போத்கயாவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றிருந்த அப்பெண், கடந்த 24 ஆம் தேதி ஓட்டப்பந்தயத்தின் போது மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸில் அரங்கேறிய கொடூரம்
இந்த நிலையில், மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் பயணத்தின் போது, ஓடும் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் ஒரு டெக்னீசியன் ஆகியோரால் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண் அளித்த புகாரில், உடல் பரிசோதனையின் போது சுயநினைவை இழந்ததாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு அல்லது மூன்று பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைது - தீவிர விசாரணை
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்கப்ட்டது. இந்தக் குழு அணிவகுப்பு மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்தியது. முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே, ஆம்புலன்சில் இருந்த ஓட்டுநர் வினய் குமார் மற்றும் டெக்னீசியன் அஜித் குமார் ஆகிய இருவரும் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆம்புலன்ஸ் மற்றும் குற்ற நிகழ்விடத்திலிருந்து முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.