டெல்லியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணாமாக, விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட பதிவில், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்
புழுதிக் காற்று காரணமாக சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால், சில விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலைமை சீராகும் வரை, பயணிகள் தங்களது விமானங்கள் குறித்த தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பெய்த ஆலங்கட்டி மழையில் இண்டிகோ விமானம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்தது. காற்றுடன் பெய்த கனமழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர்.
பயணிகள் அலறல்
விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் பத்திரமாக தரையிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்தில் இருந்து தப்பிய பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.