கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி தப்பிய சம்பவம் மற்றும் கைது
கோவிந்தசாமி அறையை அதிகாரிகள் இன்று அதிகாலை ஆய்வு செய்தபோது, அங்கு அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
கண்ணூர் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரிலும், மோப்ப நாய்கள் உதவியுடனும், கண்ணூரின் தலப்பு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கிணற்றுக்குள் பதுங்கியிருந்த கோவிந்தசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சௌமியா கொலை வழக்கு
இந்த சம்பவம் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்றது. பாலக்காடு மாவட்டம், ஷோர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியைச் சேர்ந்த சௌமியா (23), எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (30) என்பவரால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சௌமியா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், 2011 பிப்ரவரி 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் கேரளாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. குற்றவாளி கோவிந்தசாமி கைது செய்யப்பட்டு, முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர், கோவிந்தசாமி கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.