தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெளியிட்ட இந்த நிகழ்வில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மகளிர் மற்றும் கல்விக்கான சலுகைகள்
பெண்களின் முன்னேற்றத்திற்காக இருசக்கர வாகனம் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை உதவித்தொகையாக ₹10,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையைப் பொறுத்தவரை, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம் மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம்
ஆன்மீக ரீதியாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்றும், தைப்பூசம் திருநாள் மாநில விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில் 'உழவே தலை' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி மற்றும் பல்வேறு பயிர்களுக்குச் சந்தை ஆதரவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கோவில்களின் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கும் திட்டமும் இதில் அடங்கும்.
சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு
தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றச் சிறப்புப் படை அமைக்கப்படும் என்றும், கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக எச்சரித்துள்ளது. மருத்துவத் துறையில் ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் டயாலிசிஸ் மையங்கள், தாய்ப்பால் வங்கிகள் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7