அரசியல்

"பெண்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திமுக கைக்கூலி"- பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம்!

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


TVK Vijay
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக விஜயின் ரசிகைகளும், தவெக பெண் தொண்டர்களுமான சிலர் வெளிப்படுத்திய கருத்தை, மோசமாக சித்தரித்து விபச்சாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்தார் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவரது பேச்சுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் கண்டனம்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி" என்று தெரிவித்துள்ளார்.