அரசியல்

8 சீட் ஓகே.. திமுக - விசிக தொகுதி பங்கீடு கையெழுத்து!

திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

8 சீட் ஓகே.. திமுக - விசிக தொகுதி பங்கீடு கையெழுத்து!
VCK & DMK
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

8 தொகுதிகளில் போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்துப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட விசிக, இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இருப்பினும், கூட்டணியின் சூழலைக் கருத்தில் கொண்டு திமுக தலைமை 8 இடங்களை ஒதுக்க முன்வந்தது. இதனை ஏற்றுக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தனி மற்றும் பொதுத் தொகுதிகள் ஒதுக்கீடு

ஒப்பந்தத்தின்படி, விசிக போட்டியிடும் 8 தொகுதிகளில் 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்த விசிக, இம்முறை கூடுதல் பலத்துடன் களம் காணத் தயாராகி வருகிறது. முன்னதாக திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளிடம் வேதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.