பாட்டாளி மக்கள் கட்சிக்குள் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. கட்சியின் சின்னம் மற்றும் கொடி தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பா.ம.க.வின் உரிமை தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினரிடையே மோதல் நிலவி வந்த சூழலில், தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பிற்கே சின்னம் மற்றும் கொடி சொந்தம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
"தேர்தல் ஆணையம் 'பிரண்ட்லி மேட்ச்' ஆடுகிறது"
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படாமல் 'பிரண்ட்லி மேட்ச்' ஆடுவதாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆவணங்களின் அடிப்படையிலேயே சின்னம் ஒதுக்கப்பட்டதாக அன்புமணி தரப்பு தெரிவிக்கப்பட்டது.
உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவு
சின்னம் தொடர்பான இந்தச் சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இரண்டு நாட்களுக்குள் இது தொடர்பாகச் சிவில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த மனுவை அடுத்த மூன்று நாட்களுக்குள் உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

LIVE 24 X 7