அரசியல்

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


Edappadi Palaniswami
ஈரோட்டில் அருகே அரசுப் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம், மினி வேன் மீது மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கோர விபத்து- மிகுந்த துயருற்றேன்

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தனது எக்ஸ் பக்கத்தில், "சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.

தொடர்கதையாகும் பேருந்து விபத்து

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இபிஎஸ் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்‌ விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.