தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதன்படி, அதிமுக 170 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண முடிவெடுத்துள்ளது.
பியூஸ் கோயல் வருகையும் அரசியல் மாற்றமும்
தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்று வெளியான நிலையில், அடுத்த சில நாட்களில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 2.30 மணியளவில் அதிமுக அலுவலகத்திற்கு பியூஸ்கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வருகை தந்தனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பிறகு, இன்றைய தினம் 10 ஆண்டுகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதே போன்று அன்புமணி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர்.
தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 18 தொகுதிகளிலும், டிடிவி தினகரனின் அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த முன்று கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுக வசம் 178 தொகுதிகள் உள்ளன. இதில் வாசன், பாரி வேந்தர், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த காட்சிகளுக்கான சீட் ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்று இடப்பட்டு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7