2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சின்னத்தை, கட்சியின் தலைவர் விஜய் விரைவில் தொண்டர்கள் மத்தியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
சின்னம் ஒதுக்கீடு குறித்த எதிர்பார்ப்புகள்
சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காகச் சின்னம் கேட்டுத் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆட்டோ, விசில் எனச் சில சின்னங்களைக் குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்கத் தமிழக வெற்றிக் கழகம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆட்டோ சின்னம் கிடைக்கும் எனத் தவெக தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கேரளாவைச் சேர்ந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதால், தவெக-வுக்கு ஆட்டோ சின்னம் கிடைக்கவில்லை. இதனால், பேட், பூமி உருண்டை, விசில், மோதிரம் உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தவெக தரப்பில் கோரப்பட்டு இருந்தது. தற்போது, தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோதிரம் சின்னம் ஒதுக்கீடு?
ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்துத் தவெக வட்டாரங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில், ஒதுக்கப்பட்ட சின்னம் நான்கு எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெண்களை அந்தக் கட்சியின் சின்னம் எளிதாகக் கவரும் வகையில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால், தவெக கோரிய சின்னங்கள் பட்டியலில் நான்கு எழுத்து கொண்டதும், பெண்களை எளிதாகச் சென்றடையக்கூடியதும் 'மோதிரம்' சின்னமே என்பதால், அது ஒதுக்கப்பட்டிருக்கலாம் எனப் பரவலாக ஊகிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர் விஜய் விரைவில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் தொண்டர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7