திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலில் பெண் பக்தர்களுக்கு மங்கலப்பொருட்களை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்து ரூ.173.58 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் வாகன நிறுத்தும் இடத்திற்காக 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,119 அம்மன் திருக்கோவில்கள், 131 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 7727.47 கோடி ரூபாய் மதிப்பிலான, 7863.08 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் பிரத்தியேக கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.
திமுக அரசு தோற்றுப்போன மாடல், குடும்ப பின்னணியில் இருந்து தமிழ்நாட்டை மீட்போம் என்ற எடப்பாடி பழனிச்சாமி பேச்சு குறித்த கேள்விக்கு, “வெட்டி வேலை செய்பவர்களுக்கும், வீணாக அரசியல் களத்தில் நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணமாக பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்றார்.
ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை குறித்த கேள்விக்கு, “திருக்கோவில் பணிகளுக்காக வந்துள்ளோம். ஆன்மீகம் தொடர்பான கேள்விகள் மட்டுமே பதிலளிக்கப்படும். அரசியல் போன்ற பிற கேள்விகளை தவிர்க்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.