நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரவிருக்கும் தேர்தல், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள், பீகார் அரசியல் நிலவரம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன் மக்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி வருவதாகவும், இதுவும் மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும், மிகப் பலம் வாய்ந்ததாக உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாஜக மீது குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து பேசிய கனிமொழி, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் உருவாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஒரே கட்டிடத்தில் 5000 வாக்காளர்களை உருவாக்குவது, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் இதுபோன்ற குழப்பங்கள் நடந்தது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பலரை வெளியேற்றி, நியாயத்திற்குப் புறம்பாக தங்களுக்கு வேண்டிய பல வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பது போன்ற செயல்கள் மூலம் பாஜக பல வெற்றிகளைப் பெற்றிருப்பதை பல தலைவர்கள் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பீகாரிலும் மீண்டும் குழப்பத்தை உருவாக்க பாஜக முயன்று வருவதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
விஜய்யை விமர்சித்த கனிமொழி
24 லாக்கப் மரணங்களுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்று விஜய் கேட்டது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ஒரு திரைப்படம் என்பது மக்களுக்குப் பல செய்திகளைச் சொல்லக்கூடிய ஒன்று.ஆனால் சில நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களில் 'லாக்கப் டெத்' சம்பவங்களை நியாயப்படுத்தும் விதமாக நடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் புதிதாக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொள்வது பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது என்று விமர்சித்தார்.
அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் 'காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்' என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.