மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் மல்லை சத்யா, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.
இரு தரப்பினரும் மாறி மாறிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மல்லை சத்யா ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
சென்னையில் நாளைத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா வீட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மல்லை சத்யா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது நான் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கிறேன், இன்னும் நான் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், "மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" என்று நேரடியாகத் துரை வைகோவைக் குறிப்பிட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு, நாளைச் சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 15-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அடுத்தகட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். "இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சிக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.