தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (S.I.R.) குறித்துச் சந்தேகம் எழுப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணிகளால் தமிழகத்தில் உள்ள யாருக்கும் வாக்குரிமை இல்லாமல் போகலாம் என்ற நிலை வரக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வாக்குரிமை குறித்த விஜய்யின் எச்சரிக்கை
தவெக தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில், இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்திருக்கும் உரிமைகளில் மிக முக்கியமானது வாக்குரிமைதான் என்று பேசினார். ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதற்கு அடையாளமும் அதுதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், "எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்துக் கேள்விப்பட்டதும் எனது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் இருக்கும் யாருக்கும் வாக்குரிமையே இல்லை என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நான், நீங்கள் உட்பட யாருக்குமே ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம்," என்று தெரிவித்தார்.
திருத்தப் பணியில் உள்ள குழப்பங்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் இருப்பதாகவும், இதனால் மக்களுக்கு நிறைய சிரமங்கள், சந்தேகங்கள் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "6.36 கோடி வாக்காளர்களுக்கு ஒரு மாதத்தில் எப்படிப் படிவங்கள் விநியோகிக்கப்படும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள்
எஸ்.ஐ.ஆர். பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள் மற்றும் வேலைக்கு போகும் பெண்கள்தான் என்று விஜய் குறிப்பிட்டார். மேலும், "படிவம் கொடுக்க வருவார்கள் என்பதற்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
புதிய வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்
வாக்கு என்ற ஒன்று இருந்தால்தான் நாட்டை நாம் காப்பாற்ற முடியும் என்று கூறிய விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் GEN Z வாக்காளர்கள் (முதல் முறை வாக்காளர்கள்) தான் மிக முக்கியமானவர்கள் என்று அறிவுறுத்தினார். வீடு வீடாகச் சென்று படிவங்களைக் கொடுக்கும்போது மக்கள் உறுதிப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புது வாக்காளர்கள் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கும்போது உறுதிப்படிவம் மற்றும் BLO-வின் தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
LIVE 24 X 7